நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Wednesday, 14 November 2007

முதியோர் இல்லம்

வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு

விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கிறார்கள்

நம்மவர்கள்........................

Monday, 8 October 2007

ஓசை

வையத்தில் வாழ்வதற்கே இடமில்லை
உனக்கோ!
வானுலகில் இடம் பார்த்து வைத்துள்ளேன்
தேனிலவு செல்ல இடம் தீட்டியுள்ளேன்
உன்
தேன் மொழியை கேட்பதற்கே காத்துள்ளேன்
வான் வெளியில் உன் வளையல் ஓசை கேட்குமுன்பு
என்
வாழ்வொளியில் உன் ஓசை கேட்கட்டுமே!

Thursday, 4 October 2007

முத்தம்

மென்காற்றே மெலிதாய் வீசக்கூடாதா
உன் முத்தம் கூட
என்னை
மூச்சு விட முடியாமல் செய்கிறதே

Friday, 10 August 2007

சிகரெட் குடிப்பியா

சிகரெட் குடிப்பியா
சிகரெட் குடிப்பியா
அப்பா மகனை அடித்தார்
மறு கையில் சிகரெட்டுடன்................

என்ன பயன்

எவ்வளவு தண்ணீர்
இருந்து என்ன பயன்
தாகத்திற்கு தண்ணீர் இல்லையே
கடற்கறையில் நான்

அன்றும்... இன்றும்....

அன்று
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
வள்ளல் என்றார்கள்

இன்று
நான் நீர் ஊற்றினேன் ரோட்டோர செடிக்கு
பைத்தியம் என்கிறார்கள்

என்னத்த சொல்றது..........

Tuesday, 7 August 2007

பாரட்ட தோணலையே!

எங்கோ
ராகுல் டிராவிட்
நல்லா விலையாடினா
பாரட்ட தெரிந்த நமக்கு

பக்கத்து வீட்டு
சாகுல் ஹமீது
நல்லா விலையாடினா
பாரட்ட தோணலையே
எதனால்
பொறாமையினாலா!
இல்லை
பக்கத்து வீடுதானே என்பதாலா!

Sunday, 5 August 2007

மனக்காயம்

காயத்திற்கு
மருந்து போடுகிறேன்
மருந்து போடுகிறேன்
என்றே
காயத்தை ஆழப்படுத்துகிறார்கள்

மனக்காயத்திற்கு
ஒரு போதும்
மருந்து போடாதீர்கள்
அதனை விட்டுவிடுங்கள்
அதன் வழியில்

மறக்கிறேன்
மறக்கிறேன்
என்று
நினைப்பதே நினைவுதானே
எப்படி மறப்பதாய் ஆகும்

கடலை போட

ஆண்களே!
கடலை போட
மாடர்ன் பெண் தேவை
ஊர் சுற்ற
மாடர்ன் பெண் தேவை
ஆனால்
திருமணத்திற்கு மட்டும்
அடக்கமான
அமைதியான
குடும்ப பெண் தேவை......
இது சரியா............

Friday, 3 August 2007

அன்று... இன்று....

அன்று

சாதிக்க வேண்டும்
இல்லையேல்
சாக வேண்டும்

இன்று

சாவதிற்குள் சாதிக்க வேண்டும்

குறை

குறை சொல்லும்
மனிதர்கள் எல்லாம்
குறைகளோடே இருக்கிறார்கள்

அழகு

அழகையே
அடிப்படையாய் கொண்டு
அமைவதிந்த காதல் எனில்
அவனியிலே
கல்லறைகளே காவியங்களாகும்...........

Thursday, 2 August 2007

ஆணுக்கு நிகர் பெண்

பெண்ணே!
ஆணுக்கு நிகர் பெண் என்று
காட்ட நீ எடுத்த கொண்ட
ஆயுதம் ஆடையா?

பேய்

பேய்

பேய் எப்படி உருவாகிறது?
நாம் இறந்தவுடன் உடலில்
இருந்து உயிர் பிரிந்து பேயாகிறது


இது உண்மையானால்
ஆடு மாடு.... இறந்தாலும்
பேயாக வந்து நான் உயிருடன்
இருக்கும்போது என்னை அடித்தாயே
என்று மனிதனை பிடிக்க வேண்டும் இல்லையா...

மனிதனில் மட்டும்தான் பேயா..........

கடவுள்

கடவுளா? மனிதனா?

கடவுள் இருக்கிறாரா?
இங்கு மனிதனுக்கே இருக்க இடம் இல்லை
கடவுளுக்கு தேவையா கோவில்......


தூசியிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
என்றால் கோவில் எதற்கு?

சிந்தியுங்கள் சில நிமிடம்....................

வெற்றி

என் மனம் என்னிடம் கூறியது

வேடிக்கை பார்க்கும் மனிதரை காட்டிலும்
விளையாடிய தோல்வியே மேல்

நீ பெறும் ஒவ்வொரு தோல்வியிலும்
ஒருவர் வெற்றி பெற காரணமாய் இருந்திருக்கிறாய்

சும்மா புகுந்து கலக்குங்க வெற்றி பெறுவாய்
என்ற நம்பிக்கையோடு....................

Friday, 27 July 2007

பிரிவு


பிரிவின் துயரம்
பிரிந்தால் புரியும்
புரிந்ததும் மனம்
இன்று அழுகின்றது

உறவின் தொடக்கம்
பிரிவில் முடியும்
பிரிந்தும் தொடர
நினைக்கின்றது தொடர்வோமா........................



பிரியாத நட்புடன்
பொன்னுதுரை.செ

Monday, 9 July 2007

பெண்ணில் பிறந்து......

பெண்ணில் பிறந்து
மண்ணில் வளர்ந்து
மண்ணுக்குள் செல்கின்ற மானிடனே

நேற்றைய உலகம்
நாளைய உலகம்
இரண்டுக்கும் இடையில் இருப்பவனே

காதலும் வேண்டாம்
காவியம் வேண்டாம்
கல்வியை மட்டும் தொடருங்களேன்

என் நிலை வேண்டாம்
பிறர் நிலை வேண்டாம்
உங்கள் நிலை உயர உழையுங்களேன்

ஆயுள் முழுதும்
ஆயிரமாயிரம்
பணம் குவிக்கின்ற அரசியலே

உன் ஆயுள் முடிந்தபின்
ஆறடி நிலம்தான்
ஆண்டவன் எழுதிட்டு சென்று விட்டான்

ஜாதியை துறந்து
மதத்தினை மறந்து
மனிதராய் மட்டும் வாழுங்களேன்

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணினை
பாரினில் உலவச் செய்யுங்களேன்


பாரத் மாதகீ ஜெ...............................

Thursday, 5 July 2007

சிவாஜி?

சமீபத்தில் சிவாஜி படம் பார்த்தேன்
அதில் ரஜினி சிவாஜி பவுண்டேசன்
ஆரம்பித்து மக்களுக்கு நன்மை செய்வார்
படத்துல மட்டும்தான் செய்வாரா?
அவ்ர்கிட்ட இருக்கிற பணத்துக்கு
நிஜத்திலும் செய்யலாமே
செய்வாரா மாட்டார்
அது புரியாம இங்க என் தலைவன்னு
சொல்லிகிட்டு பால் அபிசேகம்
பண்ணிகிட்டு திரியாராங்க திருந்துங்கப்பா
இனிமேலாவது

Wednesday, 27 June 2007

கா........த..........ல்

கா - காத்திருப்பர் காதல் காலை வாரிவிடும் வரை
கடைசியில் காவி உடை அணிந்து திரிவர்

த - தன்னிலை அறியாமல் தவமிருப்பர் காதலுக்காய்
தன்னிலை அறிந்தபின் தனித்திருப்பர்

ல் - ல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்வர்
இருப்பதும் இல்லாமல் போகும் வரை

Monday, 25 June 2007

தோல்வி

ஜெயிக்க வேண்டும்
என்ற வெறியை விட
தோற்று விடுவோமோ
என்ற பயம்
அதிகமாக இருந்ததே
என் தோல்விக்கான காரணம்



தோல்வியுடன்
செ.பொன்னுதுரை

சுற்றிக் கொண்டே

சுற்றிக் கொண்டே
இருக்கின்றேன் ஒரே இடத்தில்
மின்விசிறியைப் போன்று.............

மணற்வீடு

கரைந்துவிடும் தெரிந்தும்
கட்டினேன் மணற்வீடு
கடற்கறையில்.........




செ.பொன்னுதுரை

Saturday, 23 June 2007

இறப்பைத் தேடி

எனக்குள்ள வேதனையை
எவர்க்கும் உரைக்காமலே
இறந்து விட துணிந்தேன்
என்னைத் தடுத்து விட்டனர்....

கடல் மீனாக வாழ்ந்த நான்
திமிங்கலத்தின் வாயில் புக
இறப்பு என்னை எதிர்கொண்டு
கரைக்கு தள்ளியது.......

நீரின்றி வாழவும் முடியாமல்
நிலத்தினிலே சாகவும் முடியாமால்
சபிக்கப்பட்டேன்
இறப்பைத் தேடி இன்னலுற்றேன்....

அழவும் முடியாமல்
ஆறுதல் அடையவும் முடியாமால்
தேறுதல் இன்றி வாழ்கின்றேன்
என் நிலை எவர்க்கும் வேண்டாம் என்றே
இறைவனை வேண்டுகின்றேன்...................................





வேண்டுதலுடன்
பொன்னுதுரை.செ

Wednesday, 20 June 2007

கற்பனைக் காதலி

சிறம் தாழ்த்தி
கொடி இடையாட்டி
தளிர் நடைபோட்டு
தவழ்ந்து வரும் பெண்
தமிழினப் பெண்
என்கண்முன்!
நிலவு தோன்றவில்லை
கேட்டால் அமாவசையாம்!
இல்லை இல்லை!
நிஜத்தில் அவள்
அழகில் நாணம் கொண்டு!
நித்திரையில் எத்திசையும்
விண்மீண்களும் விசிறிவிட்டது
விடியும் வரை!
மொட்டுகளும் முகம்
திறக்கவில்லை - அவள்
நித்திரையில் கனவு கலையுமென!
கனவில் காகமும் கவிபாடியது
இக்கவிதையின் கண்ணயற்விற்காய்!
சிலைகளும் சிணுங்கின
நிஜ சிலையின் அழகைக்கண்டு!
நிலவும் தவமிருந்த்து
கனவில் இவள் வருவளா என்று!
அப்படியொருவள் அவனியில் இருந்தால்
இப்படியொருமுறை வரச்சொல்லுங்கள் பார்க்கலாம்..............




கற்பனையுடன்
செ.பொன்னுதுரை.

வலியோடு சேர்ந்த வாழ்க்கை

எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் அழியும்போது
ஏற்படுகின்ற வலி
வலியோடு சேர்ந்த வாழ்க்கை
வழிதான்என்ன?




வலியுடன்
செ.பொன்னுதுரை

பிறப்பதேன் இம்மண்ணில்

மனிதரை மனிதர்
மனிதராய் மதிக்காவிடில்
இம்மண்ணில் வாழ்ந்தென்ன

இறப்பதே எல்லோர்
முடிவென்றால்
பிறப்பதேன் இம்மண்ணில்

துடிப்பதோ என் இதயம்
இதை அறியுமா இவ்வையம்


துடிப்புடன்
செ.பொன்னுதுரை

முனனோட்டம்

உங்களின் பின்னூட்டத்தில்
உள்ளது எனது முன்னோட்டம்





செ.பொன்னுதுரை

நண்பர்களே

நண்பர்களே

எனையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

உங்களில் ஒருவனாக....................................




நட்புடன்

செ.பொன்னுதுரை

தொடக்க காதல்

இதயக்கதவோரம் காவல் வைத்து என்
இதயக்கதவினை பூட்டிவிட்டேன் சாவியைத் தொலைத்துவிட்டு
சந்தோசமாகத்தானிருந்தேன்-ஆனால்
நீயோ சாவித்துவாரம் வழியே உள்புகுந்து
சத்தம் போடாமல் பெரிதாகிவிட்டாய்
சாவியைத் தேடினேன் கிடைத்தது
சாவியுடன் தொலைந்த என்
இதயத்தை எங்கு சென்று தேடுவேன்.................



உண்மையான காதலுடன்...............
செ.பொன்னுதுரை