அந்த காலத்திலிருந்து நம் பழக்கத்தில் உள்ள சில சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்-பழக்க வழக்கங்களும் அதற்கான காரணிகளும்: பழக்க வழக்கம் என்ற பெயரில் காரணம் தெரியாமலேயே இன்றும் பல பழங்கங்கள நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கு நான் படித்த ஒரு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு முனிவர் தம் சீடர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தார், அப்பொழுது ஆசிரமத்தில் வளரும் பூனை ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தது. அதனால் சீடர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக முனிவர் அந்த பூனையை வகுப்பறைக்கு அருகில் உள்ள தூணில் பிடித்து கட்ட சொன்னார். அவர் ஒவ்வொரு முறை வகுப்பு எடுப்பதற்கு முன்பும் பூனை தூணில் கட்டப்பட்டது. முனிவர் வயதாகி இறந்தவுடன் வேறொரு முனிவர் சீடர்களுக்கு வகுப்பு எடுக்கலானார், முன்புபோலவே வகுப்பு எடுப்பதற்கும் முன் பூனை தூணில் கட்டப்பட்டது சில காலத்திற்கு பிறகு பூனை இறந்துவிட்டது. வகுப்பு எடுக்க வந்த முனிவர் தூணில் பூனை கட்டப்படாததை கண்டு சீடர்களை அழைத்து நான் வகுப்பு எடுக்கும் முன் தூணில் பூனை கட்ட வேண்டும் என்று தெரியாதா என்று ஆத்திரப்பட்டார். பின்பு பூனை ஒன்று புதிதாக வாங்கப்பட்டு தூனில் கட்டியபிறகே வகுப்பு எடுக்கலானார்.
இன்று நம் சாஸ்திர சம்பிரதாயங்களும்-பழக்க வழக்கங்களும் இந்த அளவில்தான் உள்ளன. இதுதான் பழக்கம் என்று கண்மூடித்தனமாக செய்வதை தவிர்த்து ஏன் என்று கேட்போமா...
Friday, 2 July 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எல்லா பழக்கத்திற்கும் அதன் பின்னணி என்ன, அது தோன்றியது ஏன் என்று கேளுங்கள்,
கேள்விகள் தானே புதிய விடைகளை தரும்
அன்று இடு காட்டிலே நெருப்பு கிடையாது,தீச்சட்டியில் தீ எடுத்துச் சென்றார்கள். இன்றும் தீச்சட்டித் தூக்கிச் செல்வது எதற்காக?
மின்னெறியூட்டுக்கும் தீச்சட்டி ஏந்திச் செல்வோமா?
ராம்ஜி மற்றும் தமிழன் அவர்களே உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் எழுத தூண்டும்.
பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.......
Post a Comment