நான் சின்ன வயதில் பல விளையாட்டுகள்(கோலி, கிட்டிப்புல், நொண்டி, கண்ணாமூச்சி, பம்பரம், பல்லாங்குழி, சில்லி, ) விளையாடுவோம், எனக்கும் சில விளையாட்டுகளின் பெயர்கள் மறந்து போய்விட்டன, இன்று சின்ன பிள்ளைகள் இந்த விளையாட்டுகளில் ஒன்று கூட விளையாடுவதாக தோன்றவில்லை. கல்வி மட்டுமே போதிக்கப்படுகிறது இல்லை இல்லை திணிக்கப்படுகிறது, அதுஅது அந்தந்த வயதில் செய்யனும், ௨0 வயதில் விளையாடாத கண்ணாமூச்சிய 60வயதில் போய் விலையாட முடியுமா?
எனக்கு தெரிந்த தாத்தா ஒருத்தர் அவருடைய சின்ன வயதில் மிகவும் கடினப்பட்டு வாழ்க்கையில் முன்னேறினாராம், அவருடைய மகனும் மிகவும் கஸ்டப்பட்டு மேலும் சொத்து சேர்த்தார், இன்று அவருடைய மகன் கஸ்டப்பட்டு கொண்டிருக்கிறார் மேலும் மேலும் சொத்து சேர்க்க, நாளை அவருடைய மகனும் கஸ்டப்பட்டு சொத்து சேர்ப்பார் எதற்காக?
சொத்து சேர்க்க வேண்டும்தான் அதற்காக எல்லாவற்றையும் இழக்க வேண்டுமா என்ன?
பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை காட்டிலும் எப்படி சொத்து சேர்க்க வேண்டும் என்று சொல்லி தருதல் நலம் (பசித்தவனுக்கு உண்ண மீனை கொடுப்பதை காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தல் சிறப்பு)
.......................வாழ்க்கை வாழ்வதற்கே...............
Thursday, 1 July 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அடுத்த தலைமுறையாவது நல்லா இருக்கட்டுமே என்ற ஏக்கம் தான்
http://vaarththai.wordpress.com
Post a Comment