உளவியல் பார்வை- I(சைக்காலஜி)படித்தபிறகு இதனை படிக்கவும்( உளவியல் பார்வை- 1(சைக்காலஜி) )
1.ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் இந்த உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர் யாரென்று கேட்டார் எல்லோரும் அப்பா, அம்மா ,தாத்தா, பாட்டி, தங்கை, என்று தங்களுக்கு பிடித்தமானவர்களை கூறினார்கள். ஒரு மாணவன்(மாணவி) மட்டும் எனக்கு மிகவும் பிடித்த நபர் நான்தான் என்றான்(ள்)(காதலை கண்டேன் படத்தில் தமன்னா கூறுவதுபோல் I love myself என்றான்(ள்)). ஆமாம் நமக்கு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தமான நபர்(கருப்பு, ஒல்லி,குண்டு வழுக்கை,எப்படி இருந்தாலும்) நாமாகத்தான் இருக்க வேண்டும்(நமக்கே நம்மை பிடிக்கவில்லையென்றால் பிறருக்கு எப்படி நம்மை பிடிக்கும்). நாம் நம்மை விரும்ப ஆரம்பித்து விட்டால், மற்றவர்களும் நம்மை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.
2.தமிழில் எனக்கு சில படங்களை பிடிக்காது ஏனென்றால் அந்த படங்களை நாம் பார்த்து முடித்தவுடன் எதையோ இழந்த ஒரு உணர்வு ஏற்படும்.( உதாரணமாக 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்). அந்த காலத்தில் நல்லதேங்கா என்றொரு திரைப்படத்தை பார்த்த பலர் இரண்டு மூன்று நாட்கள் அந்த பாதிப்பிலிருந்து மீளவே இல்லையாம்( உணவு கூட உண்ணாமல் இருந்தார்களாம்).திரைப்படங்கள் நமக்குள் நேர்மறையான எண்ணங்களை உருவாக்க வேண்டும், சிரிக்க ரசிக்க செய்யவேண்டும்,அழ வைக்க கூடாது( கஸ்டத்தை மறக்கலாம்னு தியேட்டருக்கு போனா அங்கேயும் அழவைச்சா). சில படங்களை பார்த்து விட்டு வெளியில் வரும்போது நாமே ஜெயித்தது(ஹீரோ ஜெயித்தது) போன்ற ஒரு உணர்வு ஏற்படும்( சிலர் தியேட்டரின் தூனில் ஓங்கி ஒரு குத்து விட்டுக் கொண்டே வெளியில் வருவார்கள்(நன்றாக கவனித்து பாருங்கள்).
Monday, 5 July 2010
சுயநலம்
நாம் எல்லோரும் சுயநலமாக வாழ்கிறோமோ என்ற சந்தேகம் எனக்குள் அவ்வப்போது வந்துபோவதுண்டு:
1.ஒரு நாள் கிணற்றில் ஒரு குழந்தை விழுந்துவிட்டது எல்லோரும் பதறியடித்து கொண்டு ஓடினார்கள், கிணற்றின் அருகே சென்று பார்த்த பலர் நல்ல வேளை என் குழந்தை இல்லை என்று பெருமூச்சி விட்டார்கள்.(எங்கே போய் கொண்டிருக்கிறோம்)
2.இலங்கையில் தழிழர்கள் கொல்லப்பட்டது எனக்கு மிகுந்த வருத்ததை தந்தது. நானும் ஒரு தமிழன் என்பதால் அல்ல, நானும் ஒரு மனிதன் என்பதால்(குறுகிய மனதோடு வாழ்வது கூட சுயநலம்தானே)

Sunday, 4 July 2010
பெரியார் சிந்தனை
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." - ஈ.வே.ராமசாமி

உளவியல் பார்வை- 1(சைக்காலஜி)
எல்லாவற்றிலும் ஒரு சைக்காலஜி இருக்கும் அவற்றைப்பற்றி(படித்தது+ என் கருத்து) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1.மேலை நாட்டில் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால் come on getup come come என்று கூப்பிடுவார்கள். அதுவே நம் வீட்டில்(நம் நாட்டில்) வீட்டில் உள்ள அனைவரும் ஓடோடிச் சென்று தூக்குவோம்( அதுதானே நம் பண்பு)இப்படியே நாம் வளர்வதால்தான் பெரியவர்களான பிறகும் வாழ்க்கையில் அடிபட்டு(தோல்வியடையும்போது) கீழே விழும் போது யாராவது வந்து தூக்கி விட மாட்டார்களா என்று கீழேயே கிடக்கிறோம் பிறர் வந்து தூக்கி விடும் வரை. பிறர் நம் மீதேறி முன்னே போய் கொண்டே இருக்கிறார்கள்.
(ஓட்டப்பந்தயத்தில்(வாழ்க்கையில்) மூன்றாவதாக ஓடிக்கொண்டிருக்கும் நான், அதே இடத்தை தக்க வைத்து கொள்வதற்கு கூட ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் எனக்கு பின்னால் ஓடி வருபவர்கள் என்னை முந்தி ஓடிக் கொண்டே இருப்பார்கள்)
2.நீங்கள் T.V பார்த்து கொண்டிருக்கும்போது விளம்பரம் வந்தால் மட்டும் volume அதிகமாகும்(நன்றாக கவனித்து பாருங்கள்) ஏனென்றால் சிதறிய உங்கள் கவனத்தை T.V யை நோக்கி கொண்டு வருவதற்காகவே...
3.பேருந்தில்(Bus)சிகப்பு கலர் பெயிண்ட் அடிப்பதற்கு(இன்று கலர்புல்லாக இருக்கட்டுமே என்று என்று பல கலர்களில் பெயிண்ட் அடிக்கிறார்கள்)காரணம் படிக்கட்டில் தொத்திக்கொண்டு பயணம் செய்பவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வை(irritate) உண்டாக்குவதன் மூலம் அவர்களை பேருந்தில் உள்ளே வரவழைப்பதற்கான முயற்சியே..
4.ஒரு சிறுவனை(சிறுமி) ஒரு டம்ளர் அல்லது சொம்பில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லுங்கள் அழகாக கொண்டு வந்து தரும். இப்பொழுது மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள், கொண்டுவரும்பொழுது பார்த்து கொண்டு வா என்று சொல்லுங்கள் குழந்தை கண்டிப்பாக கீழே போட்டுவிடும் ஏனென்றால் அதுவரை அந்த சிறுவன்(சிறுமி) கீழே விழுவதற்கான சாத்தியம் பற்றி யோசிப்பதில்லை. கீழே விழுந்துவிடுமோ என்று யோசிக்கும்போதுதான் அவன்(அவள்)தவறவிடுகிறான்.(தோற்று விடுவோமோ என்ற பயம்தான் ஒருவனின் தோல்விக்கு காரணமாகிறது...)

Friday, 2 July 2010
சாஸ்திர சம்பிரதாயங்களும்-பழக்க வழக்கங்களும்
அந்த காலத்திலிருந்து நம் பழக்கத்தில் உள்ள சில சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்-பழக்க வழக்கங்களும் அதற்கான காரணிகளும்: பழக்க வழக்கம் என்ற பெயரில் காரணம் தெரியாமலேயே இன்றும் பல பழங்கங்கள நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கு நான் படித்த ஒரு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு முனிவர் தம் சீடர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தார், அப்பொழுது ஆசிரமத்தில் வளரும் பூனை ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தது. அதனால் சீடர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக முனிவர் அந்த பூனையை வகுப்பறைக்கு அருகில் உள்ள தூணில் பிடித்து கட்ட சொன்னார். அவர் ஒவ்வொரு முறை வகுப்பு எடுப்பதற்கு முன்பும் பூனை தூணில் கட்டப்பட்டது. முனிவர் வயதாகி இறந்தவுடன் வேறொரு முனிவர் சீடர்களுக்கு வகுப்பு எடுக்கலானார், முன்புபோலவே வகுப்பு எடுப்பதற்கும் முன் பூனை தூணில் கட்டப்பட்டது சில காலத்திற்கு பிறகு பூனை இறந்துவிட்டது. வகுப்பு எடுக்க வந்த முனிவர் தூணில் பூனை கட்டப்படாததை கண்டு சீடர்களை அழைத்து நான் வகுப்பு எடுக்கும் முன் தூணில் பூனை கட்ட வேண்டும் என்று தெரியாதா என்று ஆத்திரப்பட்டார். பின்பு பூனை ஒன்று புதிதாக வாங்கப்பட்டு தூனில் கட்டியபிறகே வகுப்பு எடுக்கலானார்.
இன்று நம் சாஸ்திர சம்பிரதாயங்களும்-பழக்க வழக்கங்களும் இந்த அளவில்தான் உள்ளன. இதுதான் பழக்கம் என்று கண்மூடித்தனமாக செய்வதை தவிர்த்து ஏன் என்று கேட்போமா...

Thursday, 1 July 2010
விவாகரத்து
கணவன் மனைவியிடையே புரிதல் வேண்டும். கணவன், மனைவி adjust செய்து போக வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது, உதாரணமாக ஒரு ஹோட்டலுக்கு கணவனும் மனைவியும் சென்றால், கணவனுக்கு(மனைவி) நூடுல்ஸ் பிடிக்குமென்பதற்காக, நூடுல்ஸ் பிடிக்காத மனைவியும்(கணவனும்) நூடுல்ஸ் உண்ண வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது, மனைவியும்(கணவணும்) கணவனுக்காக(மனைவிக்காக) என்று பிடிக்காத நூடுல்ஸை உண்ணக்கூடாது. அப்படி மனைவி(கணவன்) உண்டால், அவ்வாறு வெகுநாட்கள் மனைவியால்(கணவனால்) கணவனுக்காக(மனைவிக்காக) வாழ இயலாது. ஆகவே adjustments யை விட understanding தான் முக்கியம்..............
(நாய்க்கு யார் பேர் வைக்கிறது அப்படிங்கிறதுல சண்டை வந்து விவாகரத்து பண்ணினா யாரும் எதுவும் செய்ய முடியாது)..........
குறைகளற்று வா ஏற்றுக் கொள்கிறேன் என்பது ஏற்றுகொள்வதல்ல, குறைகளோடு ஏற்றுக் கொள்ளுதலே ஏற்றுக் கொள்ளுதல்(குறைகளற்றோரும் உண்டோ இப்புவியில்)...

எங்கே போய் கொண்டு இருக்கிறோம்- I I
நான் சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது இங்க் பேனா பயன்படுத்துவோம், இன்று மை பேனாதான் நான் உட்பட பயன்படுத்துகிறோம் அதுவும் use and throw, இன்று எல்லா பொருட்களிலும் use and throw, பொருட்களில் மட்டுமா இந்த use and throw மனிதர்களை கூட இன்று use and throw செய்கிறோமோ என்று தோன்றுகிறது.
ஆதியில் நாம் மிருகங்களோடு மிருங்களாகத்தான் வாழ்ந்தோம், அன்று மனிதன் மனிதை கொல்லவில்லை விலங்குளை போலவே, ஆனால் இன்று??
அன்று எப்படி வாழ்ந்தார்கள் நம்மவர்கள்
ஊருக்கொரு சத்திரம், வீட்டிற்கொரு திண்ணை வழிப்போக்கர்கள் களைப்பாற, ஆனால் இன்றோ?
மாற்றம் வேண்டும் மரத்தில் உள்ள பட்டை உரிந்து மரம் வளர்வது போன்ற இயல்பான மாற்றம்.
...........எங்கே போய் கொண்டு இருக்கிறோம்...................

எங்கே போய் கொண்டு இருக்கிறோம் - I
நான் சின்ன வயதில் பல விளையாட்டுகள்(கோலி, கிட்டிப்புல், நொண்டி, கண்ணாமூச்சி, பம்பரம், பல்லாங்குழி, சில்லி, ) விளையாடுவோம், எனக்கும் சில விளையாட்டுகளின் பெயர்கள் மறந்து போய்விட்டன, இன்று சின்ன பிள்ளைகள் இந்த விளையாட்டுகளில் ஒன்று கூட விளையாடுவதாக தோன்றவில்லை. கல்வி மட்டுமே போதிக்கப்படுகிறது இல்லை இல்லை திணிக்கப்படுகிறது, அதுஅது அந்தந்த வயதில் செய்யனும், ௨0 வயதில் விளையாடாத கண்ணாமூச்சிய 60வயதில் போய் விலையாட முடியுமா?
எனக்கு தெரிந்த தாத்தா ஒருத்தர் அவருடைய சின்ன வயதில் மிகவும் கடினப்பட்டு வாழ்க்கையில் முன்னேறினாராம், அவருடைய மகனும் மிகவும் கஸ்டப்பட்டு மேலும் சொத்து சேர்த்தார், இன்று அவருடைய மகன் கஸ்டப்பட்டு கொண்டிருக்கிறார் மேலும் மேலும் சொத்து சேர்க்க, நாளை அவருடைய மகனும் கஸ்டப்பட்டு சொத்து சேர்ப்பார் எதற்காக?
சொத்து சேர்க்க வேண்டும்தான் அதற்காக எல்லாவற்றையும் இழக்க வேண்டுமா என்ன?
பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை காட்டிலும் எப்படி சொத்து சேர்க்க வேண்டும் என்று சொல்லி தருதல் நலம் (பசித்தவனுக்கு உண்ண மீனை கொடுப்பதை காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தல் சிறப்பு)
.......................வாழ்க்கை வாழ்வதற்கே...............

Subscribe to:
Posts (Atom)